‘சென்னை அபார்ட்மெண்டில்’... ‘மூன்றாவது மாடியில்’... ‘சிறுவனுக்கு நிகழ்ந்த'... 'பதைபதைக்கும் சம்பவம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 06, 2019 05:39 PM

சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின், மூன்றாவது மாடியில் இருந்து, சிறுவன் ஒருவன் கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The chennai boy accidentally falls off the third floor

மாதவரம் அலெக்ஸ் நகர் மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் தனசேகரன். இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களுக்கு கார்த்தி மற்றும் வசந்தகுமார் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் வசந்தகுமார், அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வந்தான். இந்நிலையில் குடியிருப்பின் 3-வது மாடியிலிருந்து வசந்தகுமார் கீழே விழுந்து உயிரிழந்தான்.

சிறுவன் தவறி விழுந்ததை அறிந்த அவனது பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடம் விரைந்து வந்த மாதவரம் போலீசார், வசந்தகுமாரின்  உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையின்போது, மாடியிலிருந்து சிறுவன் வசந்தகுமார் தவறி விழுந்ததாக அவனது பெற்றோர் தெரிவித்தனர்.

ஆனால் மாடியிலுள்ள சுற்றுச்சுவரை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சுற்றுசுவர்  பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டிருந்ததை கண்டுப்பிடித்தனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், சிறுவன் வசந்தகுமார் உண்மையில் தவறி விழுந்தானா அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டானா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #DIED #CHENNAI #APARTMENT