'ரூம்க்கு வரல.. வேற ரூம்ல தூங்கியிருப்பான்னு நெனச்சனே!.. 3-ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 06, 2019 04:17 PM

ஆந்திராவின் திருப்பதி அருகே உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ளது சல்லப்பள்ளி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் தாசரி ஆத்யா. 3-ஆம் வகுப்பு பயின்று வரும் தாசரி ஆதித்யா,  4-ஆம் வகுப்பு பயிலும் தனது அண்ணனுடன் ஒன்றாக பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் இருந்து வந்துள்ளான்.

8 yrs old boy murdered by unknown persons in BC Hostel

இந்த நிலையில், தனது தம்பி தாசரி ஆதித்யா, அன்றைய இரவு, ரூமை விட்டு வெளியில் சென்றுவிட்டு, திரும்பி வரவேயில்லை. ஆனால் வேறு யாருடைய அறையிலோ தம்பி தூங்கியிருப்பான் என நம்பி, அவனைத் தேடாமல், தாசரி ஆதித்யாவின் அண்ணன், தனது அறையிலேயே உறங்கியுள்ளான். ஆனால் விடிந்தால், வாயைத் திறந்தபடி ரத்த வெள்ளத்தில் தாசரி ஆதித்யா பாத்ரூம் அருகே இறந்து கிடந்துள்ளான்.

இதனையடுத்து சிறுவனின் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்ததோடு, சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, ஹாஸ்டல் வார்டன் மற்றும் சக நண்பர்களை விசாரிக்கத் தொடங்கினர். கொலைக்குற்றவாளி யாரென தெரியாததால் பிரிவு 174-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags : #SAD #MURDER #BIZARRE #HOSTEL #ANDHRAPRADESH