இருசக்கர வாகனத்தின் மீது ‘தனியார் பேருந்து மோதி கோர விபத்து’.. ஆத்திரத்தில் பொதுமக்கள் ‘பேருந்துக்கு தீ வைத்ததால் பரபரப்பு’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Sep 04, 2019 09:46 PM

திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

3 killed as private bus ploughs into road side crowd in Dindigul

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சிந்தளவாடம்பட்டியில் உறவினரின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக துர்கை ராஜ் என்பவர் தனது மனைவி விஜயா, மாமியார் அங்கம்மாள் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அவர்கள் மீது அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்து ஒன்று மோதியுள்ளது. இந்த விபத்தில் துர்கை ராஜ், விஜயா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பேருந்து மோதியதில் படுகாயமடைந்த அங்கம்மாள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் ஆத்திரத்தில் விபத்தை ஏற்படுத்திய பேருந்துக்கு தீ வைத்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கொளுந்துவிட்டு எரிந்த தீயை போராடி அணைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #DINDIGUL #PRIVATEBUS #ACCIDENT #PUBLIC #FIRE