‘தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த..’ 3 வயது பெண் குழந்தை.. ‘சிதைந்த நிலையில் பிளாஸ்டிக் பையில் கிடைத்த பயங்கரம்..’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Aug 01, 2019 07:58 PM

ஜார்க்கண்ட்டில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை கடத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 year old girl Kidnapped Raped and Beheaded in Jharkhand

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூர் ரயில்வே பிளாட்பாரத்தில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தை காணாமல் போயுள்ளது. இரவு முழுவதும் தேடியும் கிடைக்காததால் குழந்தையின் தாய் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் தனக்குத் தெரிந்த ஒரு நபர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் போலீஸில் கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில் குழந்தை காணாமல் போன அன்று பதிவான சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்துள்ளனர். அதில் ஒரு நபர் கைகளில் தூங்கும் குழந்தையுடன் நடந்து செல்வது பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளின் உதவியோடு 3 பேரைக் கைது செய்த போலீஸார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் அளித்த தகவலின்படி அருகே ஒரு புதரிலிருந்து குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பிலிருந்து, “சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவர் மற்றும் குழந்தையின் தாய் சந்தேகித்த நபர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் நிலையத்துக்கு 4 கி.மீ தொலைவில் சேரிகளுக்கு அருகே உள்ள புதரிலிருந்து பிளாஸ்டிக் பையில் குழந்தையின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குழந்தையைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் பின்னர் குழந்தையின் தலையைத் துண்டித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிதைந்த நிலையில் குழந்தையின் உடல் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மோப்ப நாய் உதவியுடன் தலையைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். தாயின் அருகே தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #JHARKHAND #3YEAROLD #GIRLBABY #KIDNAPPED #GANGRAPED #BEHEADED #BRUTALMURDER