‘பள்ளி மாணவர்கள் மோதலில் நடந்த பயங்கரம்..’ ஆத்திரத்தில் மாணவன் செய்த அதிர வைக்கும் காரியம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jul 30, 2019 01:53 PM

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

school student brutally murdered in Kodaikanal

கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு படித்து வந்த இரண்டு மாணவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. உறைவிடப் பள்ளியான அங்கு நேற்று இரவு உணவு சாப்பிடச் சென்ற போது அவர்கள் இருவரும் காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில் பள்ளி விடுதி அருகே இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஒரு மாணவர் கத்திரிக் கோலால் இன்னொரு மாணவரைத் தாக்கியுள்ளார். மேலும் அங்கிருந்த கிரிக்கெட் ஸ்டெம்பாலும் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அவரைத் தாக்கிய மாணவரிடம் போலீஸார் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #KODAIKANAL #SCHOOL #STUDENTS #BRUTALMURDER