‘கடனாக வாங்கிய 7000 ரூபாயைத் திருப்பித் தராத காதலி..’ இளைஞர் செய்த அதிர வைக்கும் காரியம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jul 24, 2019 08:20 PM

ஈரோடு சத்தியமங்கலம் அருகே தனியாக வாடகை வீட்டில் வசித்துவந்த பெண் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Man murders lover for not repaying Rs 7000 arrested

சத்தியமங்கலம் அருகே உள்ள மூலக்கடைப் பகுதியில் தேவி (45) என்பவர் கடந்த 20 ஆண்டுகளாகத் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மதியம் வீட்டில் அவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இதுதொடர்பாக ராமகிருஷ்ணன் (30) என்பவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் தேவியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். திருமணம் ஆகாத தேவிக்கும் ராமகிருஷ்ணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அவரிடம் இருந்து தேவி 7000 ரூபாயைக் கடனாகப் பெற்றுள்ளார். பின்னர் அதைத் திருப்பித் தராததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்திரமடைந்த ராமகிருஷ்ணன் தேவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். 7000 ரூபாய் கடனுக்காக பெண்ணின் கழுத்தை அறுத்து இளைஞர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #BRUTALMURDER #ERODE #DEBTPROBLEM