‘கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த பயங்கரம்..’ முதல் கணவர் செய்த பதைபதைக்க வைக்கும் காரியம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jul 22, 2019 11:20 AM

மதுரை அருகே இரண்டாவது கணவருடன் வசித்து வந்த கர்ப்பிணி பெண் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Pregnant woman murdered by first husband in Madurai

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அம்சத் என்ற கர்ப்பிணி பெண் தனது இரண்டாவது கணவர் மதன் என்பவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென இவர்களுடைய வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அம்சத்தை சரமாரியாக வெட்டியுள்ளனர். அதைத் தடுக்க முயன்ற மதனையையும் அவர்கள் வெட்டியுள்ளனர்.

இதில் அம்சத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீஸார் அம்சத் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். படுகாயமடைந்த மதன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தக் கொலையை அம்சத்தின் முதல் கணவர் வடிவேலு ஆத்திரத்தில் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக இதுவரை வடிவேலு உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடு புகுந்து கர்ப்பிணி பெண்ணை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MADURAI #PREGNANTWOMAN #BRUTALMURDER