'132 கிராமங்கள்'.. 'சிங்கிள் பெண் குழந்தை கூட இல்லயா?'.. மிரளவைக்கும் பின்னணி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jul 22, 2019 12:29 PM

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்திரகாஷி மாவட்டத்தில் சுமார் 132 கிராமங்களில் ஒரு பெண் குழந்தை கூட கடந்த மூன்று மாதங்களில் பிறக்கவில்லை என்கிற அதிர்ச்சி ரிப்போர்ட் சமீபத்திய பாலின விகித சிறப்பு ஆய்வு ஒன்று மூலம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

no girl baby in 132 villages of uttarkashi in last 3 months

இந்த ஆய்வின் அடிப்படையில் வெளியான தகவல்களின்படி 216 குழந்தைகள் இந்த 132 கிராமங்களில் கடந்த மூன்று மாதங்களில் பிறந்திருப்பதாகவும், ஆனால் இந்த 216 பேருந்துகளில் ஒரு பெண் குழந்தை கூட இல்லை என்பது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்த ஆய்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஒவ்வொரு பகுதியிலும் குழந்தை பிறப்பு விகிதம் பற்றிய தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. உண்மையில் ஒரு பெண் குழந்தைகூட பிறக்கவில்லையா?, அல்லது அவ்வாறு கடந்த மூன்று மாதங்களில் 132 கிராமங்களில் பிறந்த 216 குழந்தைகளில் ஒரு குழந்தை கூட பெண் குழந்தை இல்லை என்றால் இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறதே? என்றும், அதனால் இதை மேற்கொண்டு ஆராய வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட் தரப்பில் உத்தரவிடப்பட்டது.

இதேபோல் இது பற்றி பேசிய சமூகக் களப்பணியாளர் கல்பனா தகூர், இது முழுக்க முழுக்க பெண் சிசுக்கொலை அல்லது பெண் சிசுக்கொலைக்கான நோய்த்தாக்கத்தை கருவிலிருந்தே உருவாக்குதல் என்கிற விஷயம்தான் என்று காட்டமாகவே விமர்சித்துள்ளார்.

இதுபற்றி விசாரித்த பத்திரிகையாளரும், அந்தப் பகுதியில் பெண் சிசு கொலை நடந்து கொண்டிருப்பதுதான் இந்த ஆய்வில் இருந்து தெரிய தெரியவருவதாக அழுத்தமாக குறிப்பிட்டதோடு, இது தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்

Tags : #FEMALE FOETICIDE #NEWBORN #GIRLBABY