‘திடீரென உயர்ந்த நீர்மட்டம்’.. நடு ஆற்றில் சிக்கிய டிராக்டர் டிரைவர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jul 12, 2019 11:52 AM

ஆற்றைக் கடக்கும் போது நடு ஆற்றில் டிராக்டருடன் சிக்கிக் கொண்ட டிரைவரின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

WATCH: Jharkhand tractor and its driver got stuck in Usri river

ஜார்கண்ட் மாநிலம் கிரித் என்ற மாவட்டத்தில் பர்கந்தா என்னும் இடத்தில் உஸ்ரி என்னும் ஆறு உள்ளது. இந்த ஆற்றை டிராக்டர் டிரைவர் ஒருவர் கடக்க முயன்றுள்ளார். அப்போது நீர்மட்டம் குறைவாக இருந்துள்ளது. அவர் நடு ஆற்றில் இருந்த போது திடீரென நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதில் டிராக்டர் மூழ்கும் அளவுக்கு நீர் சென்றதால், நடு ஆற்றில் டிராக்டரின் மீது நின்றுகொண்டு அவர் தத்தளித்துள்ளார். இதனால் அவரை மீட்க உடனடியாக பொக்லைன் இயந்திரம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை அடுத்து சில நிமிட போராட்டத்துக்குப்பின் நடு ஆற்றில் சிக்கிக்கொண்ட டிராக்டர் டிரைவரை பொக்லைன் இந்தியந்திரத்தின் உதவியுடன் பத்திரமாக மீட்டுள்ளனர்.

Tags : #TRACTOR #JHARKHAND #DRIVER #RIVER