‘திருமணமான 3 மாதத்தில்..’ இளம் தம்பதிக்கு நடந்த ‘பதைபதைக்க வைக்கும் பயங்கரம்..’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jul 04, 2019 12:55 PM

காதல் திருமணம் செய்த இளம் தம்பதி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

couple brutally murdered by gang in Tuticorin

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பகுதியைச் சேர்ந்த சோலைராஜ் (24) என்பவர் பல்லாகுளம் பகுதியை சேர்ந்த ஜோதி (21) என்பரை சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் குளத்தூர் அருகே உள்ள உப்பளத்தில் கூலித்தொழிலாளியாக வேலை செய்துவந்துள்ளனர். இவர்களுடைய காதலுக்கு பெண் வீட்டில் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், மூன்று மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். திருமணத்திற்குப் பிறகும் பெண் வீட்டிலிருந்து இவர்களுக்கு மிரட்டல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை இவர்கள் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள குளத்தூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்தவர்களை மர்ம கும்பல் ஒன்று கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #BRUTALMURDER