கொட்டித் தீர்க்கும் பருவமழை.. ‘மின்னல் தாக்கியதில் 51 பேர் பலியான பரிதாபம்..’

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jul 25, 2019 12:13 PM

பீகார் மற்றும் ஜார்க்கண்டில் மின்னல் தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.

Lightning strikes kill 51 in Bihar and Jharkhand

தீவிரமடைந்துள்ள பருவ மழையால் பீகார் மற்றும் ஜார்க்கண்டில் தொடர்ந்து சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நகரங்களில் வீடுகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் பீகாரில் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக பீகார் பேரிடர் மேலாண் துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இதுவரை மின்னல் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து பீகார் மற்றும் ஜார்க்கண்டில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.

Tags : #LIGHTNINGSTRIKES #BIHAR #JHARKHAND