‘நாய்க்கு பயந்து வீட்டுக்குள் ஒதுங்கியவரை..’ திருடன் என நினைத்து செய்த கொடூரம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jul 23, 2019 08:21 PM

உத்தரப் பிரதேசத்தில் நாய்க்கு பயந்து வீட்டுக்குள் ஒதுங்கியவரை திருடன் என நினைத்து எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man brutally killed on suspicion of being thief in UP

உத்தரப் பிரதேசம் பாராபங்கி நகரிலுள்ள ரகுபுரா கிராமத்தில் சுஜித் குமார் (26) என்ற இளைஞர் தனது மாமியார் வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை சில தெரு நாய்கள் துரத்தியதில் பயந்து போய் அருகில் இருந்த வீட்டுக்குள் சென்று ஒளிந்துள்ளார். அவரைப் பார்த்த அந்த வீட்டில் இருந்தவர்கள் திருடன் என நினைத்துக் கூச்சல் போட்டுள்ளனர்.

அதைக் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரைத் திருடன் என நினைத்துத் தாக்கியுள்ளனர். சுஜித் குமார் குடித்திருந்ததால் அவரால் தான் திருடன் இல்லையென சரியாக விளக்க முடியாமல் போயுள்ளது. அதற்குள் அவர்கள் சுஜித் குமாரைக் கடுமையாகத் தாக்கி பின்னர் எரித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் படுகாயமடைந்திருந்த சுஜித் குமாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் 5 பேரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #UP #BRUTALMURDER #THIEF #DOG #SUSPICION