ஆடம்பரச் செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்த மகன்.. ‘தாய் செய்த அதிர வைக்கும் காரியம்..’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jul 22, 2019 06:35 PM

மதுரை அருகே ஆடம்பரச் செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை தாயே எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

mother murdered her son by setting him on fire in Madurai

மதுரை ஒத்தக்கடை அருகிலுள்ள காளிகாப்பானைச் சேர்ந்த பாண்டிக்காளை (55) என்பவருடைய மனைவி சரோஜா (50). இவர்களது இரண்டாவது மகன் அஜித்குமார் (21) மதுரை கே.கே. நகர் பகுதியிலுள்ள கல்லூரி ஒன்றில் பிகாம் படித்து வந்துள்ளார். பாண்டிக்காளைக்கு உடல்நலம் சரியில்லாமல் போக சரோஜாவே கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் அஜித்குமார் தவறான பழக்கங்களுக்காகவும், ஆடம்பர செலவுக்காகவும் பணம் கேட்டு தாயை அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறால் கடந்த 18ஆம் தேதி தூங்கிக் கொண்டிருந்த மகன் மீது சரோஜா மண்ணெண்ணையை ஊற்றித் தீவைத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் சரோஜாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஜித்குமார் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து சரோஜா மீதான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை தாயே மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MOTHERANDSON #BRUTALMURDER #FIRE