கிணற்றுக்குள் மிதந்த.. ‘சாக்குப்பையில் இருந்த பெண் சடலம்..’ அதிர வைக்கும் காரணம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jul 18, 2019 07:08 PM

சென்னையில் காணாமல் போன பெண் மதுராந்தகம் அருகே சாக்குப்பையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

woman brutally murdered in Chennai 4 including 2 woman arrested

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த அல்போன்ஸ் மேரி என்பவரைக் கடந்த 15ஆம் தேதி முதல் காணவில்லையென போலீஸார் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் மதுராந்தகம் அருகே ஒரு விவசாயக் கிணற்றிலிருந்து மேரியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரைக் கொலை செய்தவர்கள் உடலை சாக்குப்பையில் கட்டி கிணற்றுக்குள் வீசியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து போலீஸார்  தீவிர விசாரணை மேற்கொண்டதில் கந்துவட்டி தொழில் செய்துவந்த மேரி அதன் காரணமாகவே கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ராயப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன், அவரது மனைவி தேவி, அதே பகுதியில் வசிக்கும் வள்ளி, முத்தையா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேரியிடம் கடனாகப் பணம் வாங்கியிருந்த வள்ளி மற்றும் மணிகண்டன் அதைச் சரியாகத் திருப்பித் தராமல் இருந்துள்ளனர். பணத்தைக் கேட்ட மேரியை வீட்டுக்கு வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். பின்னர் வீட்டுக்கு வந்தவருடன் வாக்குவாதம் ஏற்பட ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்ட பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #BRUTALMURDER #CHENNAI