பூசாரி உட்பட 3 பேருக்கு.. ‘கோயிலுக்குள் நடந்த பயங்கரம்..’ மிரள வைக்கும் காரணம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jul 16, 2019 12:07 PM

ஆந்திராவில் சிவன் கோயில் முன்பு 3 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Human sacrifice 3 found dead in Shiva temple in Andhra Pradesh

அனந்தபுரம் கொத்தி கோட்டா கிராமத்திலுள்ள பழமையான சிவன் கோயிலில் ஓய்வு பெற்ற ஆசிரியரான சிவராம் ரெட்டி, அவரது சகோதரி கமலம்மா ஆகியோர் பூஜை செய்து வந்துள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த லட்சுமியம்மாள் என்பவரும் அவர்களுடன் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சிவன் கோயில் முன்பு  சிவராம் ரெட்டி, கமலம்மா, லட்சுமியம்மாள் ஆகியோர் தலை வெட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ந்த ஊர் மக்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த போலீஸார் சம்பவ இடத்தை ஆய்வு செய்த போது கோயிலுக்கு அருகே பூஜை ஒன்று நடத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் சிவலிங்கத்தின் மீது ரத்தக்கறை இருந்ததைக் கண்ட போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். கோயில் வளாகத்திலும் ரத்தம் தெளிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அருகில் பூஜை நடத்தப்பட்டிருப்பதால் கோயில் வளாகத்தில் புதையல் இருப்பதாகக் கருதி யாராவது  அவர்களை நரபலி கொடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags : #ANDHRAPRADESH #SHIVATEMPLE #BRUTALMURDER #HUMANSACRIFICE