‘இதெல்லாம் வேண்டாமெனக் கண்டித்த மகள்..’ தாய் செய்த அதிரவைக்கும் வைக்கும் காரியம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jul 02, 2019 01:28 PM

தவறான பழக்கத்தைக் கண்டித்த மகளைத் தாயே கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mother murdered her teenage daughter in kerala

கேரள மாநிலம் நெடுமங்காடு தெக்கும்கரையைச் சேர்ந்த மஞ்சுஷா (34) என்பவர் கணவர் இறந்த நிலையில் பள்ளியில் படிக்கும் மகள் மீராவுடன் (16) தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அனீஷ் (29) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்துவந்துள்ளது. ஒரு நாள் மஞ்சுஷாவும், அனீஷும் வீட்டில் தனியாக இருப்பதை மீரா பார்த்துள்ளார். இதைத் தொடர்ந்து இந்தத் தவறான நட்பைக் கைவிடுமாறு தாயிடம் மீரா கேட்டுள்ளார்.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மஞ்சுஷா மகளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு அனீஷுடன் சேர்ந்து உடலைக் கிணற்றில் வீசியுள்ளார். பின்னர் தன் மகள் காதலனுடன் சென்றுவிட்டாள் என உறவினர்களிடம் கூறிய மஞ்சுஷா அவரைத் தேடிப் போவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். பல நாட்களாகியும் அவர் திரும்பாததால் சந்தேகமடைந்த மஞ்சுஷாவின் தாய் வல்சலா இதுபற்றிப் போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் நடத்திய விசாரணையில் அனீஷும் மாயமானது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து போலீஸார் தேடுதலைத் தீவிரப்படுத்தியதில் மஞ்சுஷா, அனீஷ் இருவரும் நாகர்கோவிலில் வீடு எடுத்துத் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருவரையும் கைது செய்த போலீஸார் மீராவின் உடலைக் கிணற்றிலிருந்து மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தாயே மகளைக் கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MOTHERANDDAUGHTER #LOVEAFFAIR #BRUTALMURDER