சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தையை கடத்திய மர்ம நபர்..! அதிரவைத்த சிசிடிவி காட்சிகள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jul 16, 2019 11:45 AM

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 வயது ஆண் குழந்தையை மர்ம நபர் கடத்தி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 year old child Kidnapped in Chennai Central railway station

ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த ராம்சிங்-நீலாவதி தம்பதியினர் சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களுக்கு 3 வயதில் சோம்நாத் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர்கள் தங்களது குழந்தையுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்துள்ளனர். அப்போது ரயில் நடைமேடையில் அயர்ந்து தூங்கியுள்ளனர். காலையில் எழுந்து பார்த்த போது அருகில் இருந்த குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனை அடுத்து குழந்தையின் பெற்றோர் உடனடியாக ரயில்வே போலிஸாரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இதனால் ரயில்வே நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் வீடியோ காட்சிகளை போலிஸார் ஆராய்ந்து பார்த்துள்ளனர். அப்போது மர்ம நபர் ஒருவர் குழந்தையை கடத்தி சென்றது வீடியோவில் தெரிந்துள்ளது.

இதனைத் தொடந்து அனைத்து ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து பார்த்ததில் தாம்பரம் ரயில் நிலையத்தில் அந்த மர்ம  நபர் குழந்தையுடன் செல்வது தெரிந்துள்ளது. இந்நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குழந்தையை கடத்திய மர்ம நபரை போலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : #CCTV #KIDNAPPED #CHENNAI #CHILD #CENTRAL RAILWAY STATION