‘அடுத்தடுத்து ரெண்டு சிக்ஸ்’ ‘சுக்குசுக்கா நொறுங்கிய கண்ணாடி’.. வைரலாகும் பாகிஸ்தான் வீரரின் பவர்புல் ஷாட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Aug 12, 2019 01:52 PM
பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் அடித்த சிக்ஸ் மைதானத்தில் இருந்த கண்ணாடியை நொறுக்கியது.

கனடாவில் குளோபல் டி20 லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், கிறிஸ் கெய்ல், ரசல், அப்ரிடி, சோயப் மாலிக், டுமினி போன்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் விளையாடி வருகின்றனர். இதில் யுவராஜ் சிங் டொரண்டோ நேஷன்ல்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் தலைமையிலான வான்கூவர் நைட்ஸ் மற்றும் பிரம்ப்டன் வுல்வ்ஸ் அணிக்கு இடையேயான டி20 போட்டி நடைபெற்றது. 16 ஓவர்களாக குறைக்கப்பட்ட இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வான்கூவர் அணி 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை குவித்தது. இதில் சோயப் மாலிக் 26 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். அதில் அவர் அடித்த இரண்டு சிக்ஸர்கள் மைதானத்துக்கு வெளியே இருந்த ஜன்னல் கண்ணாடிகளைப் பதம் பார்த்தன.
இதனைத் தொடர்ந்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பிரம்ப்டன் வுல்வ்ஸ் அணி 13.4 ஓவர்களில் 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. இதில் அதிகபட்சமாக காலின் முன்ரோ 62 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி வெளியேறினர்.
In an unusual scenario, @realshoaibmalik literally hit two glass breaking sixes.#GT2019 #BWvsVK pic.twitter.com/5kuAQoQBbE
— GT20 Canada (@GT20Canada) August 9, 2019
