‘4 வருஷமா வளர்த்தது’... ‘தேம்பி, தேம்பி அழுத சிறுமி’... வைரலான வீடியோவால் நடவடிக்கை!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Aug 06, 2019 05:27 PM
ஆசை ஆசையாக வளர்த்த இரு மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதால், சிறுமி ஒருவர் தேம்பி அழும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
மணிப்பூரில் கக்சிங் மாவட்டத்துக்கு உட்பட்ட ஹியாங்லாம் மக்கா லேக்காய் பகுதியை சேர்ந்தவர் 9 வயது சிறுமி வாலென்டினா எலங்பாம். இவர் தனது வீடு அருகேவுள்ள ஆற்றின் கரையோரம், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், ஒன்றாவது படித்துக் கொண்டிருந்தபோது, இரு குல்மோகர் மரங்களை நட்டுள்ளார். தினமும் பள்ளியிலிருந்து வரும் அவர், அந்த மரங்கள் வளர்வதை கண்டு மகிழ்ச்சி ஆவார். தற்போது வாலென்டினா எலங்பாம் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அண்மையில் அந்த ஆற்றின் கரையோர பகுதிகளை அரசு அதிகாரிகள் சுத்தம் செய்தபோது, சிறுமி வளர்த்த இரு மரங்களும் வெட்டி அகற்றப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, 4 வருடங்களாக வளர்த்த மரம் வெட்டப்பட்டதால், வீட்டில் தேம்பி தேம்பி அழுதுள்ளார். இதனை வீடியோ எடுத்து பதிவு செய்த அவரது உறவினர், சமூக வலைதளத்தில் பரவ விட்டார். இந்த வீடியோவை அம்மாநில முதலமைச்சர் பிரன் சிங், வனத்துறை அமைச்சர் ஷியாம்குமார் சிங், என்ஜிஓஸ் உள்ளிட்டோரும் பார்த்துள்ளனர்.
சிறுமியின் இயற்கை மீதான ஆர்வத்தை புரிந்து கொண்ட அதிகாரிகள், சிறுமியின் வேண்டுகோளுக்கு ஏற்ப, சாலையோரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 20 மரக்கன்றுகளை நட்டனர். தற்போது அப்பகுதியை சேர்ந்த மக்களும் 500 மரக்கன்றுகளை நட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மரங்கள் மீது ஆர்வம் கொண்ட வாலென்டினா எலங்பாம் என்ற அந்த சிறுமிக்கு, அப்பகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.
Elangbam Valentina, 9 years old crying over cutting down her two Gulmohar trees planted by herself in the road widening of her village road at Hiyanglam Village, Kakching District of Manipur. Now she pledges to plant 20 more such trees.. #plantloverhttps://t.co/nvPWVfxKd5
— Santosh S K (@Inaoba) August 4, 2019