‘பந்தை பின்னாடி மறச்சு வச்சு வித்தியாசமா பௌலிங் செய்த அஸ்வின்’.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jul 23, 2019 01:57 PM

டிஎன்பிஎல் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வித்தியாசமாக பந்துவீசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

WATCH: Ashwin\'s another bizarre delivery in TNPL, video goes viral

டிஎன்பிஎல் நான்காவது சீசன் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் ட்ராகன் மற்றும் அருண் கார்த்திக் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று திருநெல்வேலியில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் ட்ராகன் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 182 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஜெகதீசன் 87 ரன்களும், ஹரி நிஷாந்த் 57 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் திண்டுக்கல் ட்ராகன் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திண்டுக்கல் அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சாளர்களில் சிலம்பரசன் 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். இப்போட்டியின் கடைசி ஓவரை வீசிய அஸ்வின் வித்தியாசமாக பந்தை பின்னால் வைத்துகொண்டு பௌலிங் செய்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #RAVICHANDRAN ASHWIN #DINDIGULDRAGONS #MADURAIPANTHERS #TNPL #VIRALVIDEO