‘எனக்கு இது பிடிக்கல’.. ‘அவங்களுக்கு எப்டி உங்களை தெரியும்’.. சிஎஸ்கே வீரரை விளாசிய முன்னாள் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 01, 2019 05:50 PM

குளோபல் டி20 லீக்கில் ‘சாம்பியன்’ என பதித்த ஜெர்சியை அணிந்து விளையாடிய பிராவோ குறித்து முன்னாள் நியூஸிலாந்து வீரர் காட்டமாக பேசியுள்ளார்.

Simon Doull slams Bravo, asks him to put his real name on jersey

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போலவே கனடாவில் குளோபல் டி20 லீக் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் விளையாடி வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற இந்திய அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தற்போது குளோபல் டி20 லீக்கில் விளையாடி வருகிறார்.

அதேபோல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோ இதில் விளையாடி வருகிறார். இத்தொடரில் ‘சாம்பியன்’ என பதிக்கப்பட்ட ஜெர்சியுடன் பிராவோ விளையாடினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முன்னாள் நியூஸிலாந்து வீரர் சைமன் டவுல் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில், ‘எனக்கு தெரியும் அந்த வார்த்தை பகட்டாகத்தான் இருக்கும். ஆனால் எனக்கு பிடிக்கவில்லை. உங்களது உண்மையான பேரை போடுங்கள். இது ஒரு புது போட்டி. இதைப் பார்க்கும் குழந்தைகள், ஆண்கள், பெண்கள், வயதானோர் என அனைவருக்கும் விளையாடும் வீரர் யார் என தெரிய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Tags : #CSK #BRAVO #GLOBALT20 #CANADA #CHAMPION #JERSEY #SIMON DOULL