'இப்படியா நடக்கணும்?'.. யூடியூப் பிரபலத்தின் 'கொடுமையான' மரணம்.. சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | Aug 01, 2019 12:39 PM
அமெரிக்க யூடியூப் பிரபலமான கிராண்ட் தாம்சன், பாராகிளைடிங் செய்யும் போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில், பரிதாபமாக உயிரிழந்துள்ளது பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பிரபல டூ-டியூப் சேனலான, கிங் ஆஃப் ராண்டம் என்கிற சேனலை 110 லட்சம் பேர் பின் தொடருகின்றனர். இந்த சேனலின் மூலம் அத்தனை லட்சம் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்த அசாத்திய திறன் கொண்டவராக வலம் வந்தவர் யூடியூப் பிரபலம் கிராண்ட் தாம்சன்.
வித்தியாசமான வீடியோக்களை பதிவிட்டு ஏகபோக ரசிகர்களைக் கவர்ந்த கிராண்ட் தாம்சன், அமெரிக்காவின் உட்டாஹ் பகுதிக்கு பாராகிளைடிங் செய்யப் போவதாகச் சொல்லி கிளம்பியுள்ளார். ஆனால் போனவர் திரும்பாததாலும், போனை எடுக்காததாலும், அவரது வீட்டார் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
அதன் பின்னர் போலீஸார், கிராண்ட் தாம்சனின் தன்னுடன் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவியைக் கொண்டு அவரை கண்டுபிடித்ததோடு, அவர் பாராகிளைடிங் செய்யும்போது ஏற்பட்ட விபத்தில் இறந்துவிட்டதாகவும், அப்போது கிராண்ட் தாம்சன் எடுத்த வீடியோ கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
