‘கடின உழைப்புக்கு மாற்றே இல்லை..’ வைரலாகும் விராட் கோலியின் பயிற்சி வீடியோ..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Jul 19, 2019 05:55 PM
உலகக் கோப்பை முடிவடைந்துள்ள நிலையில் இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் உடனான தொடருக்குத் தயாராகி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் 3 ஒரு நாள் போட்டிகள், 3 T20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது இந்தியா. இதற்காக இன்று நடைபெறுவதாக இருந்த வீரர்கள் தேர்வு தொடர்பான கூட்டம் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு விராட் கோலி டெஸ்ட் தொடருக்கு மட்டும் கேப்டனாகத் தொடர்வார், மற்ற குறைந்த ஓவர் போட்டிகளுக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது. மேலும் விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகிய இருவருக்கும் இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டது. இவை குறித்தும், இந்திய அணியில் தோனியின் எதிர்காலம் குறித்தும் வீரர்கள் தேர்வு தொடர்பான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் விராட் கோலி தான் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடின உழைப்பிற்கு மாற்றே இல்லை என அவர் பதிவிட்டுள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Hard work has no substitute. 🙌🏼
Music - @thescript pic.twitter.com/vuVxc9Djjm
— Virat Kohli (@imVkohli) July 19, 2019
