‘அவுட் ஆகாமலேயே வெளியேறிய இந்திய வீரர்..’ அம்பயரை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Jul 26, 2019 11:14 AM
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற யுவராஜ் சிங் மீண்டும் கிரிக்கெட் களத்துக்குத் திரும்பியுள்ளார்.
கடந்த ஜூன் 10ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த யுவராஜ் சிங் தற்போது வேறு நாடுகளில் நடக்கும் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று வருகிறார். கனடாவில் நடைபெற்று வரும் க்ளோபல் டி20 தொடரில் விளையாடி வரும் யுவராஜ் சிங் டொரான்டோ நேஷனல்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ளார்.
நேற்று தொடங்கிய இந்தத் தொடரின் முதல் போட்டியில் யுவராஜ் சிங்கின் டொரான்டோ நேஷனல்ஸ் அணியும், கிறிஸ் கெயிலின் வான்கூவர் நைட்ஸ் அணியும் மோதின. முதலில் விளையாடிய யுவராஜ் சிங்கின் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய கிறிஸ் கெயிலின் அணி 17.2 ஓவர்களிலேயே 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்தப் போட்டியில் யுவராஜ் சிங் 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியது தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. 16வது ஓவரில் யுவராஜ் அடிக்க முயற்சித்த பந்து விக்கெட் கீப்பரிடம் சென்று பின் ஸ்டம்ப்பில் பட்டது. இதற்கு அம்பயர் அவுட் கொடுத்ததால் தான் அவுட் என நினைத்து யுவராஜும் வெளியேறினார். ஆனால் பந்து ஸ்டம்ப்பில் படும்போது அவர் கிரீஸுக்குள் இருந்தது வீடியோவில் தெளிவாகத் தெரியவர, இதற்கு அவுட் கொடுத்த அம்பயரை ரசிகர்கள் ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
Wtf yuvi 🙄 #CanadaT20 #yuvrajsingh pic.twitter.com/dXQuGv1aov
— 😎 (@arihantbanthia5) July 25, 2019
Who in the hell appoints such umpires a 5 year old child will also say it's not out. #GT20 #YuvrajSingh
Check out "Yuvi Falls Prey to Umpire's Howler" on Hotstar!https://t.co/UR2Pnq9lYl
— Jeri Alexander (@IamJerialex) July 26, 2019