‘உலகளவில் ஹிட் அடித்த தனுஷ் பாடிய பாடல்’.. ‘ஒரே மாதிரி பாடி அசத்திய பாண்ட்யா பிரதர்ஸ்’ வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 11, 2019 06:30 PM

இந்திய கிரிக்கெட் வீரர்களான பாண்ட்யா சகோதரர்கள் பிரபல தமிழ் பாடலை பாடி அசத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Hardik Pandya and Krunal Pandya sings Why This Kolaveri Di song

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2012 -ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் படம் 3. இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்த கொலவெறி பாடல் படம் வெளிவருவதற்கு முன்னதாக வெளியாகி உலகமெங்கும் வைரலானது. யூடியூப்பில் மொழி பேதமின்றி அனைவராலும் ரசிக்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான பாண்ட்யா சகோதர்கள் கொலவெறி பாடலை பாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ‘பாண்ட்யா மியூசிக் ஸ்டுயோவில் ஒய் திஸ் கொலவெறி டி’ என பதிவிட்டு க்ருணல் பாண்ட்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வரும் க்ரூணல் பாண்ட்யா, பேட்டிங் மற்றும் பௌலிங்கில் அசத்தி வருகிறார். இதில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய க்ருணல் பாண்ட்யா தொடர்நாயகன் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

Tags : #DHANUSH #HARDIKPANDYA #KRUNALPANDYA #KOLAVERIDI #SONG #VIRALVIDEO #TEAMINDIA