'மாநகரப் பேருந்துக்குள் இளம்பெண் நடனம்'... 'வைரலான வீடியோவால் டிரைவருக்கு நேர்ந்த சோகம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Jul 18, 2019 07:45 PM

டெல்லியில் பேருந்துக்குள் இளம் பெண் நடனமாடும் வீடியோ வெளியானதை அடுத்து, அதன் ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Delhi Girl Dances on DTC Bus, Driver suspended

கடந்த 12-ம் தேதி ஜானக்பூரிக்கு அருகில் டெல்லி நகரப் பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது. பயணிகள் யாரும் இல்லாதநிலையில், அந்தப் பேருந்தில் இளம் பெண் ஒருவர் சினிமா பாடலுக்கு நடனமாடினார். இதனை அந்தப் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர், மார்ஷல் ஆகியோர் வேடிக்கை பார்ப்பது போன்றும் வீடியோ வெளியானது.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டதை அடுத்து, பேருந்தின் ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நடத்துனருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மார்ஷல், சிவில் டிஃபென்ஸ் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். பொதுச் சொத்தை அங்கீகரிக்கப்படாத செயலுக்கு அனுமதித்தது, அதன்மூலம் டெல்லி போக்குவரத்துக்கு கழகத்தின் கண்ணியத்தைக் கெடுத்தது என அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Tags : #VIRALVIDEO #DELHI