வேடிக்கை பார்த்தவர்களை ஆக்ரோசமாக விரட்டிய காட்டுயானை..! வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jul 24, 2019 07:10 PM

கேரளாவில் கிராம மக்களை யானை விரட்டிய வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Villagers are run for their lives when an elephant charges in Kerala

கேரளா மாநிலம் வயநாடு அருகே உள்ள பனமரம் என்னும் கிராமத்தில் யானைக் கூட்டத்தை விட்டு பிரித்து ஒற்றை யானை தனியாக திரிந்துள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் சாலையின் ஓரமாக அந்த யானை நின்றுள்ளது. இதனைப் பார்க்க மக்கள் ஆர்வமாக வர வர கூட்டம் அதிகமாகியுள்ளது.

இதனால் மிரட்சியடைந்த யானை தீடீரென அங்கிருந்த மக்களை விரட்டியுள்ளது. இதனால் பயந்துபோன மக்கள் தலைதெறிக்க தப்பி ஓடியுள்ளனர். இதில் 4 பேர் காயமடைந்தாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் யானையை பத்திரமாக காட்டுக்குள் விரட்டியுள்ளனர்.

Tags : #ELEPHANT #KERALA #VILLAGERS #VIRALVIDEO