‘பர்ஸ்ட் சிக்ஸ் அடுத்து போல்ட்’.. அஸ்வின் சுழலில் சிக்கிய இந்திய அதிரடி பேட்ஸ்மேன்..! வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Aug 01, 2019 12:06 PM
டிஎன்பிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் விக்கெட்டை கைப்பற்றிய வீடியோவை அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரின் 14 -வது லீக் போட்டி திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், ஸ்ரீகாந்த் அனிருதா தலைமையிலான காரைக்குடி காளை அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த காரைக்குடி காளை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஸ்ரீகாந்த் அனிருதா 98 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணியின் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் 17 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வின் ஓவரில் போல்ட் ஆகி வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் 17 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 161 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஹரி நிஷாந்த் 56 பந்துகளில் 81 ரன்களும், ஜெகதீசன் 47 பந்துகளில் 78 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
