‘பிரேக் பிடிக்காமல் சென்ற அரசுப் பேருந்து..’ தக்க சமயத்தில் இளைஞர்கள் செய்த காரியம்.. வைரலாகும் வீடியோ..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jul 24, 2019 07:03 PM

திண்டுக்கலில் அரசுப் பேருந்து பிரேக் பிடிக்காமல் சென்றதைப் பார்த்த இளைஞர்கள் சமயோஜிதமாக யோசித்து பேருந்தை நிறுத்தி பயணிகளைக் காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. 

Youngsters stop running bus save passengers video goes viral

திண்டுக்கலில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்றில் பிரேக் பிடிக்காமல் போயுள்ளது. இதனால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்த முடியாமல் தவித்துள்ளார். இதைப் பார்த்த அங்கிருந்த ஜொமேட்டோ ஊழியர் உட்பட  சில இளைஞர்கள் உடனடியாக அருகிலிருந்த பெரிய கற்களை எடுத்து பேருந்தின் டயர்களுக்கு அடியில் போட்டுப் பேருந்தை நிறுத்தியுள்ளனர். இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து பயணிகள் பாதுகாப்பாக பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்டுள்ளனர். பிரேக் பிடிக்காத பேருந்தை இளைஞர்கள் கற்களைப் போட்டு நிறுத்தி பயணிகளைக் காப்பாற்றிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

Tags : #YOUNGSTERS #SAVE #PASSENGERS #VIRALVIDEO #GOVERNMENTBUS