'ஹெல்மெட் அணியாததால், வழிமறித்த போக்குவரத்து காவலர்'... 'குடிபோதையில் நண்பருடன் சேர்ந்து இளம்பெண் செய்த காரியம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Jul 17, 2019 12:35 PM

டெல்லியில், போக்குவரத்து காவலரிடம், அநாகரீகமாக நடந்து கொண்ட, ஒரு இளம்பெண்ணையும், அவரது நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Drunk Woman And Partner Misbehave With delhi Traffic Police

டெல்லி மாயாபூரி பகுதியில், ஸ்கூட்டியில் ஹெல்மெட் அணியாமல், குடிபோதையில் ஒரு ஆணும், பெண்ணும் வந்துள்ளனர். அப்போது, அவர்களை பணியில் இருந்த போக்குவரத்து காவலர் மறித்துள்ளார். வாகனத்தில் இருந்து இறங்கிய இளம்பெண், போக்குவரத்து காவலரை, தகாத வார்த்தைகளை கூறி, தாக்க முயன்றுள்ளார். வண்டியில் அமர்ந்திருந்த நபரும்,  போக்குவரத்து காவலரை தவறான வார்த்தைகளால் திட்ட முயன்றார்.

இதுகுறித்து, போக்குவரத்து காவலர் அளித்த புகாரில், வாகனத்தை ஓட்டி வந்த அனில் பாண்டே என்பவரையும், அவருடன் வந்து, குடிபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்ட மாதூரி என்ற பெண்ணையும், காவல்துறையினர் கைது செய்தனர். போதையில், அந்த பெண்ணும், அவருடன் வந்தவரும், போக்குவரத்து காவலரிடம் நடந்து கொண்ட சம்பவத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags : #DELHI #DRUNKEN #VIRALVIDEO