‘கோலியின் வேறலெவல் என்ட்ரீ’.. ‘அதிர்ந்த அரங்கம்’.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 01, 2019 02:50 PM

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விராட் கோலிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

WATCH: Kohli shared video before leaving India\'s tour of West Indies

உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அதில் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்கான வீரர்கள் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. விக்கெட் கீப்பர் தோனி பாரா மிலிட்டரில் பங்கேற்பதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் விளையாடவில்லை.

அதனால் அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக விளையாட உள்ளார். மேலும் தீபக் சஹார், ராகுல் சஹார், கலீல் அஹமது போன்ற இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. இது ராகுல் சஹாருக்கு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி என்பது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் செல்வதற்கு முன்னதாக மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் விராட் கோலி கலந்து கொண்டார். அப்போது கோலிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : #BCCI #VIRATKOHLI #INDVWI #TEAMINDIA #VIRALVIDEO