‘போலீஸ் யூனிஃபார்மில் எஸ்.ஐ செய்த காரியம்..’ பரபரப்பை ஏற்படுத்திய வைரல் வீடியோ..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Behindwoods News Bureau | Aug 01, 2019 06:26 PM

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.ஐ ஒருவர் பொது இடத்தில் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

UP Cop suspended for kissing woman while being in uniform

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.ஐ ஒருவர் காவலர் சீருடையில் இருக்கும்போதே ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சுமார் 15 நாட்களுக்கு முன்னர் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஃபிரோசாபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள அந்த வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

இதைப் பற்றி சம்பந்தப்பட்ட ஹோட்டல் சார்பிலும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வீடியோவில் உள்ள எஸ்.ஐ கடந்த சில மாதங்களாக தெரியாத பெண்களுடன் அங்கு வந்து தங்குவதாகவும், அவர் தங்குவதற்கு உரிய பணத்தையும் ஹோட்டலுக்கு கொடுப்பதில்லை எனவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து அந்த எஸ்.ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அவரிடம் உரிய விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. காவலர் ஒருவர் சீருடையில் இருக்கும்போதே  தகாத முறையில் நடந்து கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #UP #POLICE #SI #HOTEL #VIRALVIDEO #KISSING #WOMAN