‘இவர்கிட்டயா இப்டி பண்றது’.. வெஸ்ட் இண்டீஸ் வீரரிடம் தீபக் சஹார் செய்த குறும்பு..! வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jul 18, 2019 02:39 PM

வெஸ்ட் இண்டீஸ் வீரரை கிண்டல் செய்யும் விதமாக இந்திய வீரர் தீபக் சாஹர் அவரை மறித்து நின்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Deepak Chahar funnily avoids collision with cornwall

இந்திய ஏ கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியை வீழ்த்தி இந்திய ஏ அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து 3 -வது ஒருநாள் போட்டி சர் விவியான் ரிச்சர்ட் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 295 ரன்களை எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மான் கில் மற்றும் அன்மோல்ப்ரீத் சிங் ஆகிய இருவரும் களமிறங்கினர். இதில் அன்மோல்ப்ரீத் சிங் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மான் கில் கூட்டணி அதிரடியாக ஆட ஆரம்பித்தது. இதில் சுப்மான் கில் 77 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 47 ரன்களும் எடுத்தனர். மிடில் ஆர்டரில் களமிறங்கிய அணியின் கேப்டன் மனீஷ் பாண்டே 87 பந்துகளில் 100 ரன்கள் அடித்து அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி 34.2 ஓவர்களில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 148 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய ஏ அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3-0 என்ற கணக்கில் இந்திய ஏ அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. இப்போட்டியின் நடுவே வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரஹீம் கார்ன்வால் மைதானத்துக்குள் பேட்டிங் செய்ய வந்தபோது இந்திய அணியின் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் கிண்டல் செய்யும் விதமாக அவரை மறித்து நின்றுவிட்டு சென்றார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #INDAVSWIA #DEEPAKCHAHAR #RAHKEEM CORNWALL #VIRALVIDEO