வைரலாகும் பிசிசிஐ வெளியிட்டுள்ள.. ‘இந்திய அணியின் ஃபன் மொமெண்ட்ஸ் வீடியோ..’

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jul 23, 2019 04:11 PM

உலகக் கோப்பையைத் தொடர்ந்து அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட உள்ளது இந்திய அணி.

BCCI wishes Yuzvendra Chahal with hilarious video goes viral

வரும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணி 3 டி20, 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் இந்திய வீரர் யுவேந்திர சாஹலை வாழ்த்தி பிசிசிஐ ட்வீட் செய்துள்ளது. அதில் சாஹல் டிவியிலிருந்து சில சிறந்த தருணங்கள் எனக் குறிப்பிட்டு வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளது பிசிசிஐ. இந்திய அணி வீரர்களுடன் சாஹல் இருக்கும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

 

Tags : #ICCWORLDCUP2019 #TEAMINDIA #INDVSWI #YUZVENDRACHAHAL #BCCI #HILARIOUS #VIRALVIDEO