‘டான்ஸ் வித் யுனிவெர்சல் பாஸ்’.. ‘சும்மா பொளந்து கட்டிய கோலி’.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 09, 2019 01:30 PM

வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது மைதானத்தில் விராட் கோலி நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Virat Kohli dances to DJ\'s tune during rain stoppage

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று அமெரிக்காவின் கயானாவில் உள்ள ப்ரோவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே மழை குறிக்கிட்டதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனை அடுத்து டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். மேலும் மழையின் காரணமாக போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 13 ஓவர்களுக்கு 1 விக்கெட்டை இழந்து 54 ரன்களை எடுத்தது. அப்போது மீண்டும் மழைக் குறிக்கிட்டது. நீண்ட நேரமாக மழைபெய்ததால் போட்டி பாதியிலேயே கைவிடப்பட்டது. அப்போது மைதானத்தில் ஒலித்த பாடல் ஒன்றுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, கிறிஸ் கெய்லுடன் குறும்பாக நடனமாடினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #VIRATKOHLI #TEAMINDIA #INDVWI #CRICKET #ODI #VIRALVIDEO