'உங்களுக்கு எல்லாம் யாரு இருக்கா'... 'நைட் ஆபீஸ் ரூம்ல வச்சு'.... 'குமுறிய சிறுமிகள்'... உலுக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Aug 12, 2019 01:48 PM

மதுரையில் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் 4 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

Four minor Girls Molested in private home Madurai

மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியில் மாசா அறக்கட்டளை சார்பில், தனியார் குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு 25-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர், சிறுமிகள் தங்கி உள்ளனர். கருமாத்தூரைச் சேர்ந்த ஞானபிரகாசம் மற்றும் ஆதிசிவன் ஆகியோர் இந்த காப்பகத்தை நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக, மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு புகார் சென்றது.

இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம், காப்பகத்திற்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு தங்கியிருந்த சிறுவர், சிறுமிகளிடம் சண்முகம் விசாரணை நடத்தினார். அப்போது சிறுமிகள் தங்கள் மன குமுறலை கொட்டினார்கள். இது குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகத்தை அதிர செய்தது. காப்பக நிர்வாகியான ஆதிசிவன், சிறுமிகளை இரவு நேரத்தில் தனது அலுவலகத்தில் வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும் மேலும் உங்களுக்காக யாரும் இல்ல, வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று சிறுமிகளை மிரட்டியுள்ளார். இதனால் ஆதரவற்ற அந்த சிறுமிகள் விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் மனதிற்குள்ளே வைத்து குமுறியுள்ளார்கள். இதையடுத்து, பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளும் உடனடியாக மதுரை முத்துப்பட்டியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மற்ற சிறுவர்-சிறுமிகளும் வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும் நடந்த சம்பவம் குறித்து குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காப்பக நிர்வாகி ஆதிசிவனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மேலும் மற்றொரு நிர்வாகியான ஞானபிரகாசத்திடம் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இதனிடையே இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிகளை சிதைத்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Tags : #SEXUALABUSE #DOMESTICABUSE #MOLESTED #MADURAI #FOUR MINOR GIRLS