‘என்னடா புது டெக்னிக்கா இருக்கு?’.. நூதன முறையில் டிக்டாக் செய்த இளைஞர்.. அதிரடியாக கைது! பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Feb 21, 2020 11:22 AM

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் டிக்டாக் செய்து வெளியிட்ட நபர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

டிக்டாக் இளைஞர் கைது Police arrests tiktok youth

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், திருச்சி ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் மற்றும் சாலையோரத்திலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கல்லூரி மாணவர் ஒருவர் டிக்டாக் செய்து வெளியிட்டுள்ளார்.

இந்த நபர் பொதுமக்களிடையே சென்று அவர்கள் சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென அவர்களை இடிப்பது, பயமுறுத்துவது, முகள் சுளிக்கும் வகையில் நடனமாடுவது என்பன போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு அதனை டிக்டாக் வீடியோவாக படம் பிடித்து வெளியிட்டுள்ளார்.

இதனை அடுத்து இந்த நபரை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில்,  பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் “டிக் டாக்” செய்த கல்லூரி மாணவரை கைது செய்யுமாறு வடகாடு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், உத்தரவிட்டார்.

அதன் பேரில் வடகாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரத்சீனிவாஸ், இந்த செயலில் ஈடுபட்ட கருக்காகுறிச்சி பகுதியை சேர்ந்த 21 வயது கண்ணன் என்கிற கல்லூரி மாணவரை கைது செய்தார்.

Tags : #TIKTOK #YOUTH