VIDEO: பெற்றோரை பதைபதைக்க வைக்கும்... 'ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்' என்றால் என்ன?.. பரபரப்பை கிளப்பும் வைரல் விபரீதம்!

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்

By Manishankar | Feb 17, 2020 02:57 PM

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே வைரலாகி வரும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச் பல்வேறு தரப்பினரின் விமர்சனத்தைப் பெற்றுள்ளது.

skull breaker challenge latest viral receives criticism

வித்தியாசமாக எதையாவது செய்து சேலஞ்ச் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பரபரப்பு கிளப்புவதை சில இணைய வாசிகள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அந்த வரிசையில் தற்போது டிரெண்டாகிக் கொண்டிருப்பது தான் இந்த ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்.

ஸ்கல் பிரேக்கர் சேலஞ்சில், பள்ளி வளாகத்தில் இரண்டு மாணவர்கள் சேர்ந்து ஒரு மாணவனை தள்ளி விட ஏதுவாக ஒரு விளையாட்டை உருவாக்கியுள்ளனர். இது தற்போது வைரலாக பரவி வருகிறது. ஆபத்தான இந்த விளையாட்டு மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவி வருவதால் பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மாதிரியான சேலஞ்சுகளில் குழந்தைகள் ஈடுபடுவதால், அவர்கள் உடலளவிலும் மனதளவிலும் பாதிப்படைவார்கள் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும், இந்த சேலஞ்சை, விளையாட்டாக கூட யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என்றும், இதுபோன்ற விளையாட்டுகளில் குழந்தைகள் ஈடுபடாமல் தடுக்குமாறு பெற்றோர்களுக்கும் வலியுறுத்தி சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

Tags : #STUDENTS #COLLEGESTUDENTS #TIKTOK #VIRAL