இது ‘வீரம்’ கிடையாது... ‘ஓடும்’ ரயிலில் ‘இளைஞர்’ செய்த காரியத்தால் ‘பதறிப்போன’ சக பயணிகள்... ‘அதிரவைத்த’ டிக்டாக் வீடியோ...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Feb 18, 2020 10:51 PM

ஓடும் ரயிலில் தொங்கியபடி பயணித்து தவறி விழுந்த இளைஞர் நூலிழையில் உயிர்பிழைக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Viral TikTok User Falls From Moving Train While Making Video

ரயிலில் பயணி ஒருவரால் எடுக்கப்பட்ட 7 விநாடி நீளம் கொண்ட டிக்டாக் வீடியோவில், ஓடும் ரயிலில் தொங்கியபடி பயணிக்கும் இளைஞர் ஒருவர் பக்கவாட்டில் தவறி விழுகிறார். அடுத்த நொடி அவர் ரயிலின் அடியில் சிக்கிவிடுவது போலத் தெரிய, சக பயணிகள் பதறிப்போய் கூச்சல் எழுப்புகிறார்கள். ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞர் நூலிழையில் உயிர் பிழைக்கிறார்.

இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஓடும் ரயிலில் இது போன்ற சாகசங்களில் ஈடுபடுவது வீரம் அல்ல முட்டாள்தனம் எனப் பதிவிட்டுள்ளார்.

 

Tags : #TRAIN #TIKTOK #VIRAL #PIYUSH GOYAL