கொரோனாவுக்கு 'நோ சிகிச்சை'... 'நோ பயம்'... 'பூரண குணம்'... பிறந்த குழந்தையின் 'அபார' நோய் எதிர்ப்பு சக்தி... 'மருத்துவர்கள் ஆச்சரியம்!'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Feb 26, 2020 07:32 AM

சீனாவில் கொரோனா பாதிக்கப்பட்டு பிறந்த குழந்தை 17 நாட்களில் எவ்வித சிகிச்சையும் இன்றி பூரண குணமடைந்த நிகழ்வு மருத்துவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

A Newborn baby Healed Without Coronavirus Treatment

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2,663 ஆக உயர்ந்துள்ளது. 77 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வுகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு கடந்த 5-ம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது.

உடனடியாக குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். சோதனையில் குழந்தைக்கு தாய் மூலமாக கொரோனா பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிறந்த குழந்தைக்கு தீவிர வைரஸ் தடுப்பு மருந்துகள் எதுவும் கொடுக்க முடியாது என்பதால், அந்த குழந்தையை தீவிர கண்காணிப்பில் வைத்திருந்தனர். அந்த குழந்தைக்கு சியோசியோ என பெற்றோர் பெயரிட்டனர்.

இந்நிலையில், 17 நாட்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த குழந்தை சியோசியோ எவ்வித சிகிச்சையும் இன்றி இயற்கையாக உள்ள நோய் எதிர்ப்பு சக்தியால் தானாகவே பூரண குணமடைந்தது. இளைஞர்களே நோய் பாதிப்பை தாங்க முடியாத நிலையில் பிறந்த குழந்தை நோயை எதிர்த்து போராடி மீண்டு வந்தது மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #CORONA #CHINA #WUHAN #NEWBORN BABY #HEALED #WITHOUT TREATMENT