‘எக்ஸாம் பயங்கர போரடிக்குதே...!, என்ன பண்ணலாம்...?’ ‘வாவ்... செம ஐடியா...’ பத்தாம் வகுப்பு மாணவன் தேர்வு அறையில் செய்த ‘டிக்டாக்’ அட்டகாசம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Feb 20, 2020 01:52 PM

தேர்வு எழுதும் போது கேள்வித்தாளை டிக்டாக்கில் மாணவன் வெளியிட்டதால் தேர்வு மேற்பார்வை மற்றும் கல்வித்துறை அதிர்ச்சியடைந்துள்ளது.

Student who published the questionnaire on the tiktok

மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுகள் நடைபெற்றுவருகிறது. நேற்று நடைபெற்ற ஆங்கிலப் பரீட்சையின் போது மாணவன் ஒருவர் செய்த காரியம் ஒரு சில மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும், அனைத்து ஆசிரியர்களுக்கு கோபத்தையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது.

சமீப காலமாக ஒரு சில மக்கள் டிக்டாக் அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்த செயலியை நல்ல வழியில் பயன்படுத்தி புகழ் பெற்றவர்களும் இருக்கின்றனர். தவறான வழியில் பயன்படுத்தி மன வருத்தத்திற்கு ஆளானவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாக நேற்று ஆங்கிலப் பரீட்சைக்கு சென்ற மாணவன் தேர்வு மைய சோதனைகளை கடந்து எப்படியோ ஒரு கைபேசியை தனது தேர்வு அறைக்கு கொண்டு சென்றுள்ளான். கையை வைத்து கொண்டு சும்மா இருக்காமல் ட்ரெண்டிங் ஆவதற்கு ஆங்கில பொதுத் தேர்வு கேள்வித்தாளை வீடியோ எடுத்து டிக் டாக் செயலியில் போட்டுள்ளார்.

வைரல் ஆகிய வீடியோ கல்வித்துறையை சென்றடைய போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி மால்டா மாவட்டத்தில் பைத்தியநாத்பூர் உயர்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய மாணவனை கண்டுபிடித்துவிட்டனர். மேலும் தேர்வு மைய கண்காணிப்புகளை, பரிசோதனைகளை கடந்து எவ்வாறு செல்போன் கொண்டு சென்றார் என தேர்வு மைய பொறுப்பாளரையும் போலீசார் விசாரித்து உள்ளனர்.

டிக் டாக் மூலம் மாணவர் செய்த செயல் அந்த மாணவனின் பெற்றோரை கவலை அடைய செய்துள்ளது.

Tags : #EXAMHALL #TIKTOK