‘இதெல்லாம் ஒரு நடிப்புத் திறமைமா!’.. ‘டிக்டாக் தோழியுடன் காதல்’.. கணவர் செய்த காரியம்.. மனைவியின் பரிதாப கதி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Feb 14, 2020 08:01 AM

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் முரளிதரன் என்பவர் திருச்சியைச் சேர்ந்த டிக்டாக் பெண்ணொருவரின் நாட்டிய திறமையை கண்டு மயங்கியுள்ளார். அதன்பின் இருவரும் பழகத் தொடங்கினர்.

lorry driver left wife to live with tiktok girlfriend

இதனையடுத்து தன்னுடைய நாட்டியத்தை மட்டுமே தனியாக டிக்டாக்கில் பதிவிட்டு கொண்டிருந்த அந்த பெண் முரளியுடன் சேர்ந்து டூயட் பாடலுக்கு வீடியோ பதிவிடும் அளவுக்கு இவர்களின் பழக்கம் முற்றியது.  இப்படி திறமைகளை மட்டுமே பரிமாறிக் கொண்டிருந்த இருவரும் ஒரு கட்டத்தில் செல்போன் நம்பரையும் பரிமாறிக் கொண்டனர். அதன்பின் விழாமலே இருக்க முடியுமா? இருவரும் நேரில் சந்தித்தனர், காதலில் விழுந்தனர் , மோட்டார் சைக்கிளில் பறந்தும் பேருந்தில் புகுந்தும் விதவிதமாக டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டனர்.

இதனிடையே முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வாழ்ந்து வந்த லாரி ஓட்டுநரான முரளிதரனுக்கும் விதவைப் பெண் ஒருவருக்கும் தன் வீட்டாரின் மூலமாக திருமணம் நடந்து முடிந்தது. ஆனால் முரளிதரன் லாரி லோடு எடுக்க செல்வதாக கூறிவிட்டு டிக்டாக்கில் தன்னுடைய காதலியுடன் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இவரது டிக்டாக் வீடியோ விவகாரம் பற்றி முரளிதரனின் மனைவியின் காதுக்கு விஷயம் போக, ‘இதெல்லாம் ஒரு நடிப்புத் திறமைமா’ என்று கூறி சமாளித்த தோடு, ‘இனி உங்களை சந்தேகப்பட மாட்டேங்க’ என்று சூடத்தின் மேல் அடித்து சத்தியம் செய்து கொள்ளும் அளவிற்கு மனைவியை நம்பவைத்து குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கினார்.

ஆனாலும் திருச்சியைச் சேர்ந்த தனது டிக்டாக் காதலிக்கு, நாமக்கல் அருகே தனி வீடு எடுத்து, தங்க வைத்து குடித்தனம் நடத்தி வந்த முரளிதரனின் செயல் அடுத்த டிக்டாக் வீடியோவில் ரிலீசானது. இதுபற்றி மீண்டும் முரளியிடம் மீண்டும் அவரது மனைவி கேள்வி கேட்க அதற்கெல்லாம் முரளியிடம் இருந்து பதில் வரவில்லை என தெரிகிறது. இந்நிலையில் வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாமலும், அன்றாட செலவுக்குக் கூட வழியில்லாமலும் தவித்து வரும் முரளியின் மனைவி தனது வாழ்க்கையை வீதிக்கு கொண்டு வர மூலக் காரணமாக இருந்த டிக்டாக்கை தடை செய்யவும், தனது கணவரை அவரது டிக்டாக் காதலியிடம் இருந்து மீட்டுக் கொண்டுவரவும் கோரி போலீசில் புகார் அளித்துள்ளார்.

Tags : #TIKTOK