VIDEO: 'ஷாப்பிங் மாலில் இலவச உணவு வாங்குவது எப்படி?'... போற போக்குல... 'என்னடா இது சின்னப்புள்ள தனமா இருக்கு!'... வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்ஷாப்பிங் மால்களில் இருந்து இலவச உணவு பெறுவது எப்படி என்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள பிரபல மால் ஒன்றில், டிக் டாக் பிரபலம் கட் கர்டிஸ் என்ற பெண் செய்த சம்பவம் தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. கையில் உணவு வகைகளோடு மால்களுக்குள் நடமாடும் நபர்களிடம் இருந்து, இந்தப் பெண் கண் இமைக்கும் நேரத்தில் உணவை நைசாகப் பறித்து விடுகிறார். உணவைப் பறி கொடுத்தவர்கள் அதற்கு கொடுக்கும் ரியாக்ஷன் தான் ஹைலைட்.
இந்த வீடியோ, நகைச்சுவையாக உள்ளதெனக் கூறி, இதைப் பாராட்டி ஒரு தரப்பினரும், இது அநாகரிகமான செயல் என மற்றொரு தரப்பினரும் டிவிட்டரில் கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர்.
I saw this going viral on other people’s accounts, so I guess I gotta own up to it: yes, I’m the girl stealing yo snacks at the mall 😈 pic.twitter.com/bWbZ62pJXS
— Kat Curtis (@thekatcurtis) January 28, 2020
