VIDEO: ‘ஸ்கூல் பஸ்’ முன் நிலைதடுமாறி விழுந்த லாரி..! திடீரென ‘வெடித்து சிதறிய’ கேஸ் சிலிண்டர்கள்..! பரபரப்பு வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jan 09, 2020 03:25 PM

சமையல் கேஸ் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி, பள்ளிக் குழந்தைகள் பேருந்து அருகே வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Truck carrying LPG cylinders catches fire in Surat

குஜராத் மாநிலம் சூரத்தில் சமையல் கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. அப்போது திடீரென நிலைதடுமாறிய சாலையில் உருண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்த சமயம் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று லாரிக்கு அருகே வந்துள்ளது. லாரி கீழே விழுந்ததை சற்றும் எதிர்பார்க்காத பள்ளிப் பேருந்தின் டிரைவர், லாரிக்கு மிக அருகில் சென்று நிறுத்தியுள்ளார்.

அப்போது திடீரென லாரியில் இருந்த கேஸ் சிலிண்டர் ஒன்று வெடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு சிலிண்டர்களாக வெடித்து சிதறியுள்ளது. இதனால் அப்பகுதியே வெடிகுண்டு விபத்து நடந்ததுபோல காட்சியளித்தது. இதனிடையே பள்ளிப் பேருந்தில் இருந்த குழந்தைகளை வேகமாக வெளியேற்றி பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர். சிலிண்டர் ஒன்று பேருந்தின் மீது விழுந்ததில் பேருந்தும் தீப்பிடிக்க தொடங்கியுள்ளது. அதிர்ஷ்டவசமாக பள்ளிக் குழந்தைகள் அனைவரும் வெளியேற்றப்பட்டதால் நூலிழையில் உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : #FIREACCIDENT #LPG #CYLINDERS #TRUCK #SCHOOLVAN #SURAT