‘அதுக்கும் குளூரும்ல?’.. நெகிழ்ச்சி செயலால் இணையத்தையே வென்ற ரிக்‌ஷாக்காரர்.. ட்ரெண்ட் ஆகும் ஃபோட்டோ!

முகப்பு > செய்திகள் > கதைகள்

By Siva Sankar | Jan 02, 2020 06:21 PM

இந்திய துணைக் கண்ட நிலப்பரப்பில் ஒவ்வோர் மாபெரும் நிலமும் தனக்கே உரிய தனித்துவமான பருவச் சூழல்களைக் கொண்டுள்ளது. ஆதலால் அநேக இடங்களில் சில்லென்ற ஒரு பருவ காலத்தை பலரும் அனுபவித்து வருகின்றனர்.

rickshaw puller gives lift to dog and rides in a cold climate

இந்த சூழலில்தான், வடமாநிலத்தின் ஏதோ ஒரு பகுதியில் ரிக்‌ஷாக்காரர் ஒருவர் ஒரு பனிச் சூழலில் ரிக்‌ஷாவை ஓட்டியபடி வருகிறார். நன்றாக உற்றுநோக்கினால், அதில் நாய் ஒன்று போர்வையை சுற்றியபடி சவாரி செய்துகொண்டிருக்கும். ஆம், மிருகத்திடம் கூட மனிதநேயத்துடன் நடந்துகொண்டுள்ள மனிதரின் மகத்துவத்தை இந்த புகைப்படம் பறைசாற்றுகிறது.

இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள நபர், Zoom in on the rickshaw and thank the heavens later என்கிற கேப்ஷனை பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தை நன்றாக பெரிதுபடுத்தி பார்த்தால், இந்த நல்லுலகத்துக்கு நன்றி சொல்லத் தோன்றும் என்கிற தொனியில் பதிவிடப்பட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பார்த்த பலரும்

ரிக்‌ஷாக் காரரின் இந்த நெகிழ்வான செயல், சமூக ஊடகத்தில் தங்களுக்கான இந்த நாளை திருப்திகரமான நாளாக மாற்றியுள்ளதாக பலரும் மேலும் நெகிழ்ந்துபோய் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தை பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே பலரும் இதனை சமூக ஊடகங்களின் வழியே பாராட்டியும் பகிர்ந்தும் வருகின்றனர்.

 

Tags : #RICKSHAW #DOG #RIDE #COLD