‘இந்த குழந்தையை நியாபகம் இருக்கா?’.. ‘மறக்க முடியாத அந்த சிரிப்ப பத்திரப் படுத்தியாச்சு’.. நெகிழவைத்த அரசு.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > கதைகள்

By Siva Sankar | Mar 05, 2020 04:52 PM

சிரியாவில் தொடர் குண்டு வெடிப்புகளை பார்த்து குழந்தை ஒன்று அநாயசமாக வெடித்துச் சிரிக்கும் நெகிழ்வான  வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகியது.

update over 3-years old Syrian girl laughed video viral

சல்வா என்கிற அந்த 3 வயது சிறுமி, தனது தந்தையுடன் சேர்ந்து குண்டுமழை பொழிந்துகொண்டிருந்ததை பார்த்து வாய்விட்டு சிரிக்க கூடிய வீடியோ சில நாட்களுக்கு முன்னர் பகிரப்பட்டது. சிரியாவில் நடைபெற்று வரும் உள்நோட்டுப் போரின் உக்கிரத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் தொடர்ந்து ஒவ்வொரு குண்டு விழும்போதும் அந்த குழந்தை சிரிக்கும் அந்த வீடியோ அனைவராலும் பகிரப்பட்டது.

இந்த நிலையில் தற்போது துருக்கி அரசின் முயற்சியால் அந்த குழந்தை பாதுகாப்பாக இருப்பதாகவும், அந்த குழந்தைக்கு முழு அடைக்கலம் கொடுத்து, குழந்தையின் மனதை பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும்

குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதை துருக்கி அரசும் உறுதிப்படுத்தியுள்ளது.

 

Tags : #VIDEOVIRAL