‘விடுறா விடுறா சூனா பானா.. இதெல்லாம் வரலாறு!’.. ‘சுட்டி நாய்க்குட்டிக்கு’ நடந்த தரமான சம்பவம்’.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Siva Sankar | Feb 07, 2020 06:48 PM

குறும்பும் குதூகலமும் நிறைந்த செல்லப் பிராணிகளின் இயல்பே எல்லாத்தையும் சோதித்து ஆராய்ந்து பார்ப்பதுதான்.

crazy puppy caught while doing this instagram video

அவற்றுடன் விளையாடுவதற்கோ அல்லது அவற்றின் சேட்டைக்கு கம்பெனி கொடுக்கவோ ஆட்கள் இருந்தால் இன்னும் அவற்றை கையிலேயே பிடிக்க முடியாது. அதற்கான கம்பெனியை தேடிக் கொண்டிருந்த சுட்டி நாய் ஒன்று ஒரு ஷாப்பில் இருந்த பொம்மை நாயை கண்டுள்ளது.

ஆனால் அச்சு அசலாக உண்மையான நாய் போலவே இருந்த அந்த கருநிற பொம்மை நாயைக் கண்டதும் இந்த குட்டி நாய், ‘ஆஹா.. நமக்கு ஒரு நண்பன் கிடைத்துவிட்டான்’ என நினைத்து கிட்டே சென்று தொட்டுப் பார்க்கிறது.

அப்போது அந்த பொம்மை நாய் கீழே விழ, ‘ஆத்தி.. எவ்ளோ பெரிய பல்பு.. கடையில இருக்குற பல்பெல்லாம் ஆஃப் பண்ணுங்கப்பா’ என்பது போல் கள்ளமாக நகர்ந்து செல்லும் நாயின் செயல்,

வீடியோவாக இன்ஸ்டாகிராமில் வலம் வருவதோடு பலரையும் ரசிக்க வைத்துள்ளது.

 

Tags : #DOGS #VIDEOVIRAL #INSTAGRAM