‘அடே.. பெர்ஃபார்மென்ஸ் பண்ண விடுறா.. பாம்பு பயலே!’.. ‘நேரலையில் பெண் செய்தியாளருக்கு நேர்ந்த பங்கம்!’.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Feb 06, 2020 11:34 PM

ஆஸ்திரேலியாவில் பெண் செய்தியாளர் ஒருவர் பாம்பை தனது தோளில் வைத்துக்கொண்டு செய்தி அளித்த போது அவரது கையிலிருந்த பாம்பு, மைக்கை பார்த்து ஆக்ரோஷத்துடன் சீறிய சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது

news reporter had a very close encounter with a snake video

ஆஸ்திரேலியாவில் உள்ள நைன் நெட்வொர்க் சேனலில் வேலை பார்க்கும் பெண் செய்தியாளர் பாம்புகளின் பாதுகாப்பு குறித்த சிறப்பு செய்தியை வழங்குவதற்காக வாகா வாகா என்கிற பகுதியில் உள்ள பாம்பு பண்ணைக்கு சென்றுள்ளார். அதன் பிறகு அங்கிருந்த பாம்பு ஒன்றை தன் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு சாரா செய்தி வழங்கத் தொடங்கினார்.

ஆனால் செய்தி வழங்கிக்கொண்டிருந்த சாராவின் கையில் கருப்பாக இருந்த அந்த மைக்கை பார்த்த அந்த பாம்பு என்ன நினைத்ததோ தெரியவில்லை ஆக்ரோஷமாக மைக்கை கொத்தத் தொடங்கியது. மீண்டும் மீண்டும் மைக்கை கடிக்கும் நோக்கத்துடன் பாம்பு சீறத் தொடங்கியதை பார்த்த சாராவுக்கு அச்சம் அதிகமாகியது. ஆனாலும் அவர் புரியாமல் சிரிக்கவும் செய்கிறார். 

இதனால் அருகில் இருந்த பாம்பு கையாளும் நபரும்

செய்தி ஒளிப்பதிவாளரும் சாராவுக்கு உதவி செய்யும் வகையில் பாம்பை அவரிடமிருந்து அப்புறப்படுத்தினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags : #SNAKE #NEWS #REPORTER #VIDEOVIRAL