‘இதோட அருமை தெரியாம இப்படி வேஸ்ட் பண்றீங்களேப்பா?’.. நெஞ்சை நெகிழவைத்த குரங்கின் செயல்.. கலங்கவைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > கதைகள்

By Siva Sankar | Mar 11, 2020 12:16 PM

தண்ணீர்க் குழாயில் இருந்து வீணாகும் தண்ணீரைக் கண்டு மனம் பொறுக்காத குரங்கு அதனை தடுத்து நிறுத்துவதற்காக மெனக்கெடும் செயல் நெஞ்சை நெகிழவைத்துள்ளது.

monkeys relentless efforts to save water goes viral video

அந்த வீடியோவில் தொடர்ந்து தண்ணீர்க் குழாயில் இருந்து தண்ணீர் வெளிவந்துகொண்டே இருக்கிறது. ஆனால் இவ்வாறு நீர் வீணாவதை விரும்பாத குரங்கு ஒன்று தன் இரு கைகளால் அந்த குழாயை அடைத்து அடைத்துப் பார்க்கிறது. எனினும் அந்த தண்ணீர்க் குழாயை அடைத்தால்தான்  தண்ணீர் வெளியாகாது என்பதை உணர்ந்த அந்த குரங்கு, அங்கேயே உட்கார்ந்தபடி குழாயை அடைத்துக்கொண்டு அமர்ந்திருந்துள்ளது.

வனத்துறை அதிகாரி ஒருவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ பார்க்கும் பலரையும் நெகிழவைத்துள்ளது. அந்த வீடியோவில் அந்த அதிகாரி,  ‘தண்ணீர் வீணாகக் கூடாது

என்கிற இந்த குரங்கின் இடைவிடாத அக்கறை நம்மை தலைகுனிய வைக்கிறது. இந்த பூமியை ஆளும் நமக்கு எல்லாமே காலடியில் கிடைத்துவிடுகிறது. அதனால் தண்ணீரை வீணடிக்கிறோம் என்பதை உணராமல், அதை சேகரிக்கும் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறோம். இதனால் சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் போகப் போகிறது ஒருநாள் என்பதை மறந்துவிடுகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இயற்கை ஒரு வரம். அதன் மதிப்பு அறிந்து அதனை பாதுகாப்பதன் அவசியத்தை உணராமல் இருக்கும் நமக்கு இந்த குரங்கிடம் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது என்பதை பறைசாற்றும் விதமாக இந்த வீடியோவை அந்த அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Tags : #VIDEOVIRAL #WATER #NATURE #MONKEY