இந்த ‘போன்களை’ எல்லாம் ‘இனி’ எளிதில் ‘ஹேக்’ செய்யலாம்... ‘ஆபத்தில்’ உள்ள ‘1 பில்லியனுக்கும்’ அதிகமான போன்கள்... ‘விவரங்கள்’ உள்ளே...
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஆண்ட்ராய்டு போன்கள் ஹேக் செய்யப்படும் அபாயத்தில் உள்ளதாக ஆராய்ச்சி ஒன்றின் முடிவில் தெரியவந்துள்ளது.
விட்ச் எனும் நிறுவனம் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில், “1 பில்லியனுக்கும் அதிகமான ஆண்ட்ராய்டு போன்கள் இனிமேல் எந்தவிதமான பாதுகாப்பு அப்டேட்களையும் (Security update) பெறாது என்பதால், அவை எளிதில் ஹேக் செய்யப்படும் அபாயத்தில் உள்ளன. இது தகவல் திருட்டு போன்ற அபாயங்களுக்கு வழிவகுக்கும்” எனக் கண்டறியப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள 40% ஆண்ட்ராய்டு பயனாளர்கள் பாதுகாப்பு அப்டேட்களை பெறவில்லை எனவும் இந்த ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது. மேலும் மோட்டோரோலா, சாம்சங், சோனி மற்றும் எல்ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களை வைத்தே இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பு இல்லாத ஸ்மார்ட்போன்களில் இருந்து ஹேக்கர்கள் குறிப்பிட்ட நபரின் தனிப்பட்ட தகவல்களை எளிதில் திருட முடியும் மற்றும் ஸ்மார்ட்போன்களின் மீதான முழுமையான கட்டுப்பாட்டையும் பெற முடியும்.
இதுகுறித்துப் பேசியுள்ள ஆராய்ச்சியாளர்கள், “சமீபத்தில் பாதுகாப்பை இழந்த போன்களுக்கு உடனடியாக எந்த சிக்கல்களும் இருக்காது, ஆனால் நாட்கள் செல்லச்செல்ல பாதுகாப்பு அப்டேட்கள் எதுவும் இல்லாததால் அவை ஹேக் செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். உங்களிடம் ஒரு பழைய போன் இருந்தால் உங்களுக்கு ஆபத்து அதிகம். அதாவது 2012 அல்லது அதற்கு முன்பு அறிமுகமான ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்தும் எவரும் ஆபத்தில் உள்ளனர் என்று இந்த ஆய்வின் வழியாக தெரியவந்துள்ளது” எனக் கூறியுள்ளனர்.
மேலும் இந்த நிறுவனம், பயனாளர்கள் தாங்கள் எதை பதிவிறக்கம் செய்கிறோம் அல்லது எதை கிளிக் செய்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. அத்துடன் வைரஸ் தடுப்பு செய்து கொள்ளவும், தகவல்களை அவ்வப்போது பேக் அப் செய்துகொள்ளவும் பயனாளர்களுக்கு இந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.